Useful Options In Google Chrome: (Google Chrome Shortcuts)
இணையத்தில் இன்று பலவிதமான Browser-கள் இருந்தாலும் பலரும் பயன்படுத்துவது Mozilla Firefox & Google Chrome இந்த இரண்டும் தான். இதற்கு முன்னர் உள்ள பதிவில் Google Chrome Shortcut & Mozilla Firefox Shortcuts பற்றி பதிவிட்டு இருந்தேன். இந்த பதிவில்
தற்போது Desktop-இல் Shortcut Icon இருக்கும்.
Google Chrome Browser - இன் சில பயனுள்ள Option-களை பற்றி பதிவிட்டுள்ளேன்.
1. Create a Shortcut For Webpage:
எந்த இணையதளத்திற்கு நீங்கள் Shortcut உருவாக்க வேண்டுமோ அந்த தளத்தை Google Chrome Browser - இல் Open செய்யுங்கள். பின்னர் பின்னர் Google Chrome Browser - இன் வலது பக்கம் உள்ள Settings என்ற Option-ஐ தேர்வு செய்து அதில் Tools Option செல்லுங்கள், இப்போது Create Application Shortcuts என்ற Option-ஐ select செய்யவும். இப்போது கீழே உள்ளது போல் ஒரு Window தோன்றும். (Ex: Google இணையதளத்திற்கு shortcut)
உங்களுக்கு எங்கே Shortcut வேண்டும் என்ற Option -ஐ தேர்வு செய்த பின்னர் Create Option-ஐ கிளிக் செய்யவும். (Ex:Desktop-இல் மட்டும் Shortcut வேண்டும் என்றால் அந்த Option-ஐ மட்டும் டிக் செய்யவும்.
2.Paste & Search
சாதரணமாக Google Chrome - இல் உள்ள Address bar - இல் Search Keyword -ஐ Paste செய்த பின்னர் Enter Button - ஐ அழுத்துவது வழக்கம். இதற்கு பதில் Address Bar - இல் மவுசை Right Click செய்து "Paste and Search" என்ற Option-ஐ தேர்வு செய்யவும்.
3. Google Chrome Task Manager
நமது கணினியில் Task Manager Option - ஐ திறக்க Crtl+Alt+Del இந்த மூன்றையும் அழுத்துவோம் அது போல் Google Chrome -இல் Task Manager Option - ஐ திறக்க Settings-->Tools-->Task Manager -ஐ கிளிக் செய்யவும்.
4. Save Image in Web Page
சாதரணமாக Google Chrome - இல் ஒரு Image-ஐ Save செய்ய வேண்டும் என்றால் அந்த Image-ஐ Right Click செய்து பின்னர் Save Image as என்ற Option -ஐ பயன்படுத்துவோம்.ஆனால் இதற்கு பதில், எந்த படத்தை Save செய்ய வேண்டுமோ அதை இணையப்பக்கத்தில் (Webpage) இருந்து மவுஸ் மூலம் எந்த இடத்தில் நீங்கள் Save செய்ய வேண்டுமோ (Ex: My Documents - இல் save செய்ய அதை Open செய்து Image -ஐ அங்கு Drag செய்யவும்) அதை திறந்து அதில் Image-ஐ Drag செய்தால் போதும். Image Save ஆகி விடும்.
5. Google Chrome Calculator
Google Chrome Browser - இல் இணையத்தில் உள்ள போது கால்குலேடர் தேவைப்படும் போது நாம் கணினியில் உள்ள கால்குலேட்டரை எடுத்து பயன்படுத்துவோம். ஆனால் Google Chrome Broswer - இல் Address Bar - இல் நமக்கு கூட்ட அலது பெருக்க (எந்த கணித செயலுக்கும்) வேண்டிய எங்களை குறியீட்டுடன் கொடுத்தால் அதற்கான விடை உடனே தோன்றும். உதாரணமாக 35698 & 56987 இந்த இரு எண்களை பெருக்க வேண்டுமானால் Google Chrome - இல் Address Bar சென்று 35698*56987 என்று டைப் செய்தால் போதும், விடை கீழே தோன்றும்.
6.Full Screen Mode
Google Chrome Browser - இல் F11 பட்டனை அழுத்தினால் இணைய பக்கம் முழுத்திரையில் (Full Screen) காணலாம். மீண்டும் சாதாரண நிலைக்கு வர மீண்டும் அதே F11 பட்டனை அழுத்த வேண்டும்.
7. PIN TAB
Google Chrome பிரவுசர் விண்டோவில் ஒரு Tab-இன் அளவை குறைக்க உதவுவதுதான் இந்த Pin Tab Option.
ஒரு Tab-இன் அளவை குறைக்க வேண்டுமானால் அந்த Tab-ஐ Right கிளிக் செய்த Pin Tab என்ற Option -ஐ கிளிக் செய்யவும்.
8. PASTE TEXT ONLY OPTION
Google Chrome Browser - இல் ஒரு இணைய பக்கத்தில் உள்ளவற்றை Copy செய்து பின் Paste செய்தால் அந்த பக்கத்தில் உள்ள படங்களும் Paste ஆகும். நமக்கு வெறும் Text மட்டும் தேவைப்பட்டால் Gmail---> Compose Mail சென்று அதில் Ctrl+Shift+V இந்த மூன்று பட்டனை அழுத்தினால் Text மட்டும் paste ஆகும். இதை Copy செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.